பறந்து கொண்டிருந்த
சிறுமி சொன்னாள்
நான் காற்றைத் தைத்து
சட்டையாகப் போட்டிருக்கிறேன்
ஒரு பறவையின் லாவகம்
பறத்தலில் தெரிந்தது
அவள் சொன்ன
காற்றுச் சட்டை
பிம்பத்திற்குள் சிக்காமல்
நழுவியது
மறுநாள்
பள்ளிக்குச் சென்ற சிறுமியை
வழியில் பார்த்துக் கேட்டேன்
காற்றுச் சட்டை
எங்கே என்று
அது காற்றிலேயே இருக்கிறது
நான் பறக்க நினைக்கும்போது
அதில் புகுந்து கொள்வேன்
சிரித்து சொல்லியபடியே
ஓடிப்போனாள்
ஓடினாளா பறந்தாளா
தெரியவில்லை
(கிருத்திகாவிற்கு)
ஆனா நம்மளை ஆனந்தத்தில் பறக்க வைத்து விடுவார்கள் அண்ணே
ReplyDeleteexcellent one... Raja
ReplyDeleteஅருமை!!!!!
ReplyDeleteகுழந்தைகளின் உலகம் இறகுகளால் ஆனது..இல்லையா கிரேட்.
ReplyDelete