Friday, March 05, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

50-

அதுவாக
போகிறது ஆமை
நாம்தான்
மெதுவாக என்று
குறியீடு செய்கிறோம்

51-

உதிர்ந்து கொண்டிருந்தது
மரம்
விழுந்து முடித்தது
இலை

52-

அவர்கள்
கண்ணீரோடு வந்தார்கள்
கடுமையான
சோதனைகளுக்குப் பிறகு
கவலை சத்து
குறைவாக இருக்கிறதென்று
திருப்பி அனுப்பபட்டார்கள்

53-

தூக்கி எறிந்த துப்பாக்கி
சொல்லிக் கொண்டே விழுகிறது
கொன்றவர்களின் பெயரை

6 comments:

  1. குறிப்புகளை ரசித்தேன்

    ReplyDelete
  2. முதல் கவிதை அருமை:)

    ReplyDelete
  3. /அதுவாக
    போகிறது ஆமை
    நாம்தான்
    மெதுவாக என்று
    குறியீடு செய்கிறோம்/

    அருமை

    ReplyDelete
  4. அதுவாகப் போக விடுவதில்லை எதையும் நாம். அருமை சந்துரு.

    ReplyDelete
  5. //அதுவாக
    போகிறது ஆமை
    நாம்தான்
    மெதுவாக என்று
    குறியீடு செய்கிறோம்//

    இது மிக அருமை!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete