Saturday, February 20, 2010

நண்பர்களும் நட்பும்

நண்பர்கள்
இறந்துபோகும்போதெல்லாம்
நட்பும்
இறந்து போகிறது
தேநீர் குடித்தபடியே
ராமசாமி சொன்னான்

போனவாரம்
எங்களோடு டீகுடித்த
முத்தையாவின் இடம்
வெறுமையாக இருந்தது

1 comment:

  1. Friends die, friendship dont னு சொல்வாங்க. வெறுமையான முத்தையாவின் இடம் அதை மீண்டும் நினைவு படுத்துகிறது.

    ReplyDelete