என் கைபட்டு
விழுந்து கொண்டிருந்தது
பொம்மை
கை நீட்டிப்
பிடிப்பதற்குள்
உடைந்து போயிற்று
சிதறிக் கிடக்கிறது
பொம்மையின் உயிர்
குழந்தை வருவதற்குள்
எடுத்தாக வேண்டும்
பொம்மை கேட்டு
அழுது அடம் பிடித்தால்
நிறுத்த முடியாது
அப்புறப்படுத்துவதற்குள்
வந்து சேர்ந்த
குழந்தையின் கையில்
சிக்கியது
பொம்மையின் கால்
அழவில்லை
தேடலுடன்
பார்த்தது குழந்தை
மற்ற பகுதிகளை
மறைத்தபடி சொன்னேன்
ஒற்றைக்காலுடன்
ஓடிவிட்டது பொம்மை
திரும்பி வருமா
என்பது போல்
பார்த்தது குழந்தை
வரும் வந்து
விட்டுப் போன
காலைத் தேடும்
உடையாமல் வைத்திரு
எனச்சொல்ல
கைக்குள்
இறுக்கிக் கொண்டது
விரட்டி வரும்
ஒற்றைக்கால் பொம்மையிடமிருந்து
தப்பிக்க
ஓடிக்கொண்டிருந்தன
கால் முளைத்த
என் பொய்கள்
அருமை
ReplyDeleteகலக்கலா இருக்கு
ReplyDeletesuperb Raaja
ReplyDeleteNice.....
ReplyDeletenalla irukku Raja!!
ReplyDelete'கால் முளைத்த பொய்கள்' அருமையா இருக்கு.
ReplyDeletenice..........!
ReplyDeleteஞானக்கூத்தனின் ”அம்மாவின் பொய்களை” நினைவூட்டியது.எளிய ஆழமான கவிதை.
ReplyDelete