நான் திரும்ப வந்து
கேட்கும் வரை
பத்திரமாக வைத்திரு
எனச் சொல்லி
அவன் ஒரு கனவைத்
தந்து சென்றான்
அதை வைத்திருப்பது
பெரும்பாடாக இருந்தது
நீண்ட நாட்களுக்குப் பிறகு
திரும்பியவன்
கனவைக் கேட்டான்
பின் சொன்னான்
இது என் கனவில்லை
நீ மாற்றி இருக்கிறாய்
நான் தந்ததுபோல
தா என்றான்
உன் கண்ணீரும் புலம்பலும்
இதில் சேர்ந்திருக்கிறது
உன் கனவுகளை
இடையிடையே புகுத்தி
சிதைத்திருக்கிறாய்
சொல்லிக்கொண்டே போனான்
நீ சொன்னது போல்
எதுவும் நடக்கவில்லை
என்றாலும் கேட்கவில்லை
இரவல் கனவை ஏன்
வாங்கினோம்
என்றிருந்தது எனக்கு
இப்போதும்
கனவில் வரும் அவன்
குற்றம் சொல்வதை
நிறுத்தவில்லை
என்னாலும் இந்த
கனவிலிருந்து
மீள முடியவில்லை
மீள முடியாத கனவு!
ReplyDeleteவாழ்த்துகள்.
அடுத்தவர் கனவை நாம் காண இயலாது. அடுத்தவர் வாழ்வை நாம் வாழ முடியாது. நம் கனவு நம் வாழ்வு.
ReplyDeleteI love the abstract content of this poem..
ReplyDeleteரசித்தேன் கொடுத்த விதத்தால்
ReplyDeleteநல்லாயிருக்குங்க
ReplyDeleteGreat thought....
ReplyDeleteநண்பர்களுக்கு நன்றி.
ReplyDelete????.........
ReplyDelete