28
நீ கூவி
விற்றப் பொய்கள்
வேறொரு
சந்தையில்
விற்றுக் கொண்டிருந்தன
நீ படுத்தடங்கப்போகும்
சவப்பெட்டியை
29
ஏற்கவா
தவிர்க்கவா
துள்ளிக் குதிக்கிறது
கேள்வித்தவளை
ஒன்றிலிருந்து
இன்னொன்றிற்கு
30
நண்பனின்
இறுதிச் சடங்கு
பார்த்து விட்டு
திரும்பினேன்
என் மரணத்தை
31
ஒரே புன்னகைதான்
பூச்செண்டும்
தரும்
போர்வாளாகவும்
மாறும்
மிகவும் அழகான வரிகள்...
ReplyDeleteஎன் வாழ்த்துக்கள்...
நீ கூவி
ReplyDeleteவிற்றப் பொய்கள்
வேறொரு
சந்தையில்
விற்றுக் கொண்டிருந்தன
நீ படுத்தடங்கப்போகும்
சவப்பெட்டியை
///
அழகான வரிகள்...
நன்றி கமலேஷ்,பிரியமுடன் பிரபு.
ReplyDeleteநல்லா இருக்கு ராஜா துள்ளிக்குதிக்கும் கேள்வித்தவளை
ReplyDeleteaththanaiyum azhagu!
ReplyDelete