திட்டப்போகும்
அம்மாவை சமாளிக்க
பல பதில்களை
யோசித்து
பலமான ஒன்றைத்
தேர்ந்தெடுத்து
வீட்டிற்குள்
அடியெடுத்து
வைக்கிறாள் சிறுமி
இப்படி
நெனைஞ்சி வந்து
நிக்கிறியே
பதறுகிறாள் அம்மா
அது இல்லம்மா
மழைய விருந்தினரா
கூப்பிட்டுக்கிட்டு
வந்திருக்கேன்
சொல்கிறாள் மகள்
மகளின் பதிலில்
பரவசமாகித்
திட்டுவதை
மறக்கிறாள் அம்மா
உங்களின் கவிதைகளை படிக்கும் போதெல்லாம் இருக்கையின் நுனிக்கு வந்து விடுகிறது மனது...அத்தனை உணர்சிகளோடு தொடர்கிறது கவிதைகள்....வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றி கமலேஷ்.
ReplyDelete