நீங்கள் வரைந்த
பூவிலிருந்து
துர்நாற்றம் வீசுகிறது
சொல்லியவனைப் பார்த்து
சிரித்தபடியே
துறவி கேட்கிறார்
எப்படி சொல்கிறாய்
உன் கையில்
பூ இருக்கிறது
என் கையில்
தூரிகை இருக்கிறது
நமக்கிடையே
வெள்ளைத்தாள்
படபடக்கிறது
கண் மூடி
அவர் கேள்வியை
முகர்ந்த அவன்
அதில் சுகந்தம் வீசுகிறது
எனச்சொல்லி
பூவை
துறவியிடம் தர
அவர் வாங்கி
வெள்ளைத் தாளில்
நடுகிறார்
வளர்ந்து விரியும்
பூவை பார்த்து
வியக்கும் அவன்
எட்டிப் பிடிக்க
நினைக்கும் வாசம்
இடம் மாறிக்கொண்டே
இருக்கிறது
ரொம்ப நல்லா இருக்கு ராஜா.
ReplyDeleteஅருமையாய் இருக்கு சந்திரா..
ReplyDeleteஅருமை..
ReplyDeleteperception differs from person to person and it depends on the attitude and the circumstance
என்று சொல்ல வருவதாக படுகிறது.
//வளர்ந்து விரியும்
பூவை பார்த்து
வியக்கும் அவன்
எட்டிப் பிடிக்க
நினைக்கும் வாசம்
இடம் மாறிக்கொண்டே
இருக்கிறது//
And these lines talk abt..
when you try to capture or conquer a thing.. it will be out of reach. nu
மனம் அடக்க நினைத்தால் அலையும்
அறிய நினைத்தால் அடங்கும் ..
அதுக்கு match ஆகிற மாதிரி தோன்றியது