என் ஒவ்வொரு கேள்விக்கும்
பதிலை படமாக
வரைந்து காட்டினாள் குழந்தை
அவள் பிஞ்சு விரல் பிடித்து
வெளியே வந்தன
குட்டிச் சித்திரங்கள்
வண்ணங்களில் நுரைத்து
மிதந்து போனது
குழந்தையின் மொழி
முற்றிலுமாக
என் கேள்விகள் வடிந்து விட
கடைசியாக
அவள் பெயர் கேட்டேன்
எல்லா வண்ணங்களையும் குழைத்து
என் மேல் பூசி விட்டு
வீட்டுக்குள் ஓடிப்போய்
கதவைச் சாற்றிக் கொணடாள்
இந்த வண்ணங்களில்
தேடிக் கொண்டிருக்கிறேன்
குழந்தையின் பெயரை
குழந்தைகள் என்றாலே குதுகூலம்
ReplyDeleteதருகிறவர்கள் தான்
படிக்கும் போதே மகிழ்ச்சி வருதுங்க
வண்ணங்களின் தேவதை. :)
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு raajaa.
anupaviththu vaasiththeen
ReplyDelete:)
ReplyDelete-priyamudan
sEral
thanks jothi,kalyani,ashok,mankuthirai and seral.
ReplyDeleteரசித்தேன்...
ReplyDelete