முன்னிரவில்
ரகசியமாய்
விசும்பி அழும் பெண்ணுக்குள்
என்ன ஓடுகிறது என்று
தெரியவில்லை
முகம் துடைத்து
நிதானித்து
மீண்டும் மெளனமாய்
அழுகிறாள்
அவள் பக்கத்து இருக்கை
காலியாக உள்ளது
பின்னால் இருக்கும் எனக்கு
எல்லாம் கேட்கிறது
என் தூக்கத்தை
களவாடி இருக்கிறது
தெரியாத ஒரு அழுகுரல்
காற்று வேண்டி
கண்ணாடியைத் திறந்து வைக்கிறேன்
வாகன ஓட்டிகளுக்கு
நட்பான
தூங்காத நெடுஞ்சாலை
இலேசாக கண் மூட
உறக்கத்தின் மீது விழுகிறது
அவள் கண்ணீர் துளி
பேருந்தில் சுற்றி வருகிறது
வயிறு பெருத்த கனவானின்
குறட்டை சத்தம்
என் யோசனை சிலுவையில்
ஆணிகள் அறைந்திருந்த
அவள் அழுகை
நின்றிருப்பது போல்
தெரிகிறது
அதிகாலை நிறுத்ததில்
இறங்கிப் போனாள்
இரவின் எந்த சுவடும் அற்று
வேறொரு பெண்ணாய்
இன்னொரு நாளுக்குள்
அருமையான பயணச்சித்திரம் இருள் வண்ணத்தில் மிளிர்கிறது சார்...
ReplyDelete//இலேசாக கண் மூட
உறக்கத்தின் மீது விழுகிறது
அவள் கண்ணீர் துளி//
இங்கு வண்ணம் கொஞ்சம் அழுத்தமாகவே படிந்திருக்கிறது...
//மெளமாய்//
சரி செய்யுங்கள் சார்.. மௌனமாய்
நன்றி தமிழ்பறவை
ReplyDeleteகவிதை அற்புதமாய் நகர்கிறது காட்சிகளுடன்
ReplyDeleteதூங்காத நெடுஞ்சாலை
ReplyDelete//தூங்காத நெடுங்சாலை நீங்களும் தானோ?//
எல்லா பெண்களும் வாழ்க்கையை இப்படித்தான் வழிநடத்துகிறார்கள் raajaa.
ReplyDeleteநல்லதொரு நாடகம் பார்த்த உணர்வு ... ஆனால் அதன் நிஜங்கள் சுடுகின்றன.
ReplyDeleteGood one
ReplyDelete-priyamudan
sEral
என் யோசனை சிலுவையில்
ReplyDeleteஆணிகள் அறைந்திருந்த
அவள் அழுகை
நின்றிருப்பது போல்
தெரிகிறது
Manam Kankinra kavidhai...
thanks ashok,uyirodai,kalyani suresh,
ReplyDeletedharumi,seral and yaazini,
என்னை நானே வாசிப்பது போல் இருக்கிறது
ReplyDeleteஎத்தனையோ பயணங்களில் நான் விசும்பியது உங்களுக்கு எப்படித் தெரிந்தது ராஜா?