பாட்டியை எல்லோருக்கும்
கதை சொல்லியாகத்தான் தெரியும்
வாயைத் திறந்தால்
கதைகளாகக் கொட்டும்
ஒவ்வொரு முறையும்
விடுபடும் புதுக்கதை
ஊரில் பெரியவர் முதல்
சிறியவர் வரை
பாட்டி கதைக்குள் அடக்கம்
படிப்பறிவில்லாத பாட்டியிடமிருந்து
எப்படி வருகின்றன கதைகள்
என்ற பிரமிப்பு ஊருக்குள் உண்டு
திரும்ப நினைக்கையில்
பாட்டி சொன்ன கதை
அட்சரம் பிசகாமல் கண்முன் விரியும்
பாட்டியின் கதைகளில்
மழை பெய்யும்
கதையில் வந்த விலங்குகள்
குழந்தைகளுக்கு நட்பாயின்
ஒரு மழைநாளில்
கதை சொல்லி பாட்டி
படுத்த படுக்கையானாள்
ஊரை நிசப்தமாக்கிவிட்டு
முடங்கிப்போனாள்
பாட்டியின் கண்களில்
தேங்கி நின்றது
சொல்ல முடியாத கதை
ஊர்ப் பெரியவரை
அருகே வரச் சொல்லி
பாட்டி முணுமுணுத்ததை
பிறகு அவர்
எல்லோரிடமும் சொன்னார்
எனக்கு எமன்
கதை சொல்லிக்கிட்டிருக்கான்
போங்க பிறகு பாப்போம்
இந்தக் கதையை நான் ரசித்தேன்
ReplyDelete'புதிய' பாட்டிக் கதைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபாட்டிக்கதை வெகு சிறப்பானது.
ReplyDeleteஓர் அழகான கதையைக் கொண்டிருக்கிறது கவிதை. வாழ்த்துகள்!
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்
நல்ல க(வி)தை...
ReplyDelete:(
ReplyDelete