Sunday, July 26, 2009

மழை வாசம்

செல்லமாய் கோபித்து
குழந்தை மேல்
படிந்துள்ள மழையை
துடைத்தெடுத்து
வேறு உடை எடுக்கப்
போகிறாள் அம்மா
ஈர துணி முகர்ந்து
மழை வாசம்
பிடிக்கிறது குழந்தை

4 comments:

  1. அழகு! அம்மா, குழந்தை, மழை, இவர்களை வைத்தே, பல அற்புதமான கவிதைகளை நீங்கள் வடித்திருக்கிறீர்கள். மூன்றுமே மிக அழகான விஷயங்கள். நினைக்கவும், பார்க்கவும், துய்க்கவும், எழுதவும், படிக்கவும், எப்போதும் விருப்பமான விஷயங்கள். தொடரட்டும்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  2. நீங்கள் தொடும் விஷயங்கள் அதை நீங்கள் சொல்லும் வழி முறை
    கவிதைக்குள் கவிதை பொதிந்திருக்கும் சூத்திரம்
    அழகு ..!

    ReplyDelete
  3. சேரல்/நேசமித்ரன்
    மனதுக்கு அருகாமையில் வரும் விஷயங்கள்
    கவிதைக்கு நெருக்கமாகி விடுகின்றன.
    உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. கவிதையில் உணர்ந்தேன் மழை வாசம் மட்டுமல்லாது அம்மாவின் வாசனையும். நன்றி ராஜா.
    நட்புடன்
    கல்யாணி சுரேஷ்.

    ReplyDelete