Wednesday, May 27, 2009

குழந்தையின் மழை

குடைகீழ்
அம்மாவுடன்
சேர்ந்து போகிறது குழந்தை
அடிக்கடி வெளியேறி
குதித்து ஆடி
நனைகிறது
அம்மா சத்தம் போட்டுக்
கூப்பிடும் போதெல்லாம்
குடைக்குள் வந்து சேர்கிறது
கொஞ்சம் மழை
குழந்தையுடன்

5 comments:

  1. உங்களைப் படிக்கத்
    தொடங்கியிருக்கிறேன்...
    இவ்வழகான வரிகளிலிருந்து...
    :))

    ReplyDelete
  2. அழகா இருக்குது! :-)))

    ReplyDelete
  3. அய்யூஊஊஊஊஊ

    அருமை ங்க

    ReplyDelete
  4. ரொம்ப‌ ந‌ல்லா இருக்குங்க‌. உங்க‌ வ‌லை கொஞ்ச‌ம் நிதான‌மா ப‌டிக்க‌ணும் போல‌. இராவ‌ண‌னுக்கு ந‌ன்றி

    ReplyDelete