வெள்ளைத் தாளைப்
பருகுவதுபோல் பூனை
பிரியம் கூடி
பூனையிடம் கேட்டேன்
உன்னை வரைந்தவரைப்
பார்க்க வேண்டும்
சின்ன சத்தங்கள் செய்தபடி
அழைத்துப்போய்
வரைந்தவரைக் காட்டியது
சூரியன் இறங்கிய
ஒளிவெளியில்
அமர்ந்திருந்தார்
கண்கள் புன்னகைக்க
வரைவதைப் பார்க்கச் சொன்னார்
பியானோவும் ஏழைச்சிறுவனும்
பார்த்தபடியே
மெல்ல இமைமூட
கேட்டது
கோடுகளின் இசை
கண்டெடுத்த
குழந்தை மனநிலையில்
கண் திறக்க
பூனை இல்லை
பியானோ காணோம்
வாசித்த சிறுவனும் இல்லை
வரைந்தவரும்
கேட்டபடி இருந்தது
நின்று போகாத
பூனையின் சத்தம்
(ஓவியர் ஆதிமூலம் நினைவிற்கு)
நல்ல ஒரு ஓவியனுக்கு
ReplyDeleteநல்ல ஒரு கவிதாஞ்சலி
நல்ல ஒரு ஓவியனுக்கு
ReplyDeleteநல்ல ஒரு கவிதாஞ்சலி
//வெள்ளைத் தாளைப்
ReplyDeleteபருகுவதுபோல் பூனை//
ரொம்பவும் ரசித்துப் படித்தேன்.
ஓவியத்தைக் கோடுகளின் இசையாகப் பார்ப்பது நல்லா இருக்கு.
நல்ல ரசிப்புத்தன்மையுடன் எழுதப்படிருக்கிறது
ReplyDeleteராஜா,
ReplyDeleteஉங்களை "வலைச்சரத்தில்" தொடுத்திருந்தேன் பார்த்தீர்களா?
http://blogintamil.blogspot.com/2008/02/iii.html
இது போன்ற அழகான கவிதைகளை வடித்து என்னை செக்க வைத்ததால்தான் :).
/பார்த்தபடியே
ReplyDeleteமெல்ல இமைமூட
கேட்டது
கோடுகளின் இசை/
இந்த வரிகள் மட்டுமல்ல; முழுக் கவிதையுமே அருமை. ஆதிமூலத்தின் இழப்பின் வலியை உணரச் செய்கிறது உங்கள் வரிகள்.
ஜ்யோவ்ராம் சுந்தர்
ReplyDeleteகூர்ந்து பார்த்துள்ளீர்கள்.நன்றி.