அவசரமாய் காகிதம் கிழித்து
காது குடைந்தபடிப் பார்த்தேன்
நான் கிழித்திருந்தது
மகள் வரைந்த மரத்தை
என்னால் தன் மரம்
செத்துப்போனதாக
அழுது புரண்டாள்
நிறுத்த முடியவில்லை
கையிலிருந்த காகிதத்தில்
பிய்ந்துபோன கிளை
கிளையை விட்டு
வெளியேறிய பறவைகள்
அவளோடு சேர்ந்து
சண்டைக்கு வந்தன
கிளை விரிந்து காடானது
காட்டின் சத்தம்
காதை உடைத்தது
நேரமாயிற்று அடங்க
குழந்தையின் அழுகையும்
காட்டின் கோபமும்
It is nice and impressive.
ReplyDeleteஏங்க இப்படி பண்ணினீங்க? எப்படி அந்தக் காட்டைத் திருப்பி கொடுக்க போறீங்க?
ReplyDelete