சிறுவர்கள் விளையாடுவார்கள்
ஓங்கி அடிக்கும் பந்தை
பார்த்தபடி இருக்கும்
மைதானம்
இந்த இடத்தில்
எங்கும் உட்காரலாம்
மூச்சை இழுத்து
விடும்போது
மைதானம் உள்போய்
வருவது போலிருக்கும்
மணல் பூங்கா என்று
அதற்கு செல்லமாய்
ஒரு பெயர் வைத்தேன்
அங்கு சினிமா தியேட்டர்
வந்தது
எதாவது ஒரு பெண்
போஸ்டரில்
சிரித்துக்கொண்டிருப்பாள்
மைதானம்
ஒரு பிரிந்து போன
தோழனைப்போல
ஞாபகத்திற்கு வரும்
பிறகு திருமண மண்டபமாயிற்று
ஊர்வலம் போகும்
பாட்டு வரும்
சாலைகள் திணறிவிடும்
கல்யான மண்டபம்
காணமல் போனது
இப்போது
அடுக்கு மாடி குடியிருப்புகள்
எல்லாம் விலைபோனதாகப்
பேசிக்கொண்டார்கள்
ஏதாவது ஒருகுடியிருப்புச் சிறுவன்
பந்து விளையாடுவான்
வீட்டின் எல்லைகளை
மனதில் வைத்து
பழைய மைதானத்து
சிறுவர்கள் அளவிற்கு
வீச்சு இருக்காது
குடியிருப்பின் சிறைகள்
கட்டிப்போடும்
பலவற்றை
பிரிந்து போன நண்பனின்
நினைவுகளைப்போல
மங்கி வருகிறது
மணல் பூங்கா
எல்லாமே வசீகரிக்கும் கவிதைகள்!
ReplyDeleteபொய்களும், வர்ணனைகளும், அதீத உவமைகளுமற்ற நேர்மையான, காட்சித்தெளிவான கவிதைகள்.
சொல்லவந்ததை நேராய், நேர்மையாய் சொல்லும் கவிதைகள்!
ரசித்தேன்! வாழ்த்துக்கள்!
nice..........
ReplyDeleteகட்டிட காட்டுக்குள் தொலைந்து போன நட்பு வலி தருகிறது.
ReplyDelete