இப்போது
என்ன
செய்துகொண்டிருக்கிறீர்கள்
எழுதாத
முதல் வரியைப்
படித்துக்கொண்டிருக்கிறேன்
இப்போது
எழுதாத
அடுத்தடுத்த வரிகளைப்
படித்துக்கொண்டிருக்கிறேன்
சரி
இப்போது
மேலும்
எழுதாத வரிகளை
ம்…இப்போது
தொடரும்
வரிகளை
இப்போதும்
அதேதானா
எப்போதுதான்
முடிப்பீர்கள்
எழுதாத
வரிகள்
முடிவதாய்
இல்லை
நானும்
படிப்பதை
நிறுத்துவதாய்
இல்லை