Saturday, May 16, 2015

ரயில்

ரயில்
ஓட்டுபவரின் கண்களால் பார்க்கிறது
என்றாள் குழந்தை
அப்போது ரயில்
ஒரு பாலத்தின் மீது
போய்க் கொண்டிருந்தது
அதை நான்
குழந்தையின் கண்களால்
பார்த்துக் கொண்டிருந்தேன்

1 comment:

  1. முகநூலில் கலக்குவது போதாதென்று ப்ளாகிலும் ...
    அருமை ஆண்டவரே ...
    ரெயிலின் கண்ணை குழந்தைகளால் மட்டுமே பார்க்க முடியும்

    ReplyDelete