Thursday, May 02, 2013

நமக்குள் சுழலும் இசை

இசை நாற்காலி விளையாட்டில் 
இறுதிச் சுற்றில் 
நாம் இருவர் மட்டுமே 
ஓடிக் கொண்டிருக்கிறோம் 
எல்லோரும் வெளியேறி விட்டனர் 
இசைத்தட்டு சுழல்வதை நிறுத்தி 
நீண்ட காலமாகிறது 
நீ அமர்ந்துவிட வேண்டும் 
என்று நானும் 
நான் அமர்ந்து விட நீயும் 
ஓடிக்கொண்டிருக்கிறோம்
நமக்குள் சுழலும் இசை 
நிற்கவே இல்லை 

1 comment:

  1. இசையை ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete