Wednesday, November 14, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

973-

இவ்வளவு 
கடுமையானதா 
எழுதுவது 
இவ்வளவு 
எளிமையானதா 
எழுதியது 

974-

வளைவின் 
முனைகளில் நாம் 
வளைவையும் 
நம்மையும் 
நேராக்கும் முயற்சியில்

975-

உங்கள் முதுகில் 
பாய்ந்திருக்கிறது 
என் கத்தி 
வீரத்திற்கான பரிசு 
என் கைகளில்

976-

சுவாரஸ்யமான போட்டி 
முந்திக்கொண்டிருக்கும் என்னை 
முந்த விரும்பும் நான்

977-

ரயில் பெட்டிகளை 
வரைகிறாள் குழந்தை 
அவள் பென்சில் வழியே 
ஓடிக்கொண்டிருக்கிறது ரயில்

978-

பழகிய பறவையின் 
சிறகை வருடினேன்.
வானத்தின் வாசம் வீசியது

979-

இருள் மழை 
கண்கள் மூடி 
நனைகிறேன் 

980-


எங்கிருக்கிறது 
இல்லாதது 

981-

மௌனத்தின் 
ஆழத்தில் 
ஆழத்தின் 
மௌனம் 





3 comments:

  1. அருமை...

    மிகவும் ரசித்தது : 973, 977 and 978

    ReplyDelete
  2. கடைசி ஒன்றினைத் தவிர மற்றவை எல்லாமே வலுவான அர்ததங்களை சுமந்து கொண்டிருக்கிற எளிய சொற்கள். பாராட்டுகள்.

    ReplyDelete