Saturday, March 19, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

419-

என் மேல்
மிருகத்தைப்போல்
படுத்துக்கிடக்கும்
அறியாமை

420-

எழுதப் பழக
நீச்சல்
வெற்றுத் தாளில்

421-

எதுவுமில்லை

அள்ளியபோது
எதுவும்
இல்லாமலில்லை

422-

தொடும்போதெல்லாம்
விரல் வழியே
உள் வரும் உலகம்

423-

உருகி வழியும் தூக்கம்
பிசின் போல ஒட்டும்
ஓடும் காலடிகளில்

424-

யுத்தம் பழகிய
உடலை
தியானத்தில்
புதைத்து வைத்தேன்

தியானம் பழகிய
அன்பை
வெளியில்
நட்டுவைத்தேன்

3 comments:

  1. /////
    என் மேல் படுத்துக்கிடக்கும்
    ஒரு மிருகத்தைப்போல்
    அறியாமை
    /////

    அறியாமை என்பது உண்மையில் மிருகம் தான்

    ReplyDelete
  2. பயனுள்ள, தேவையான குறிப்புகள்..

    ReplyDelete