Thursday, March 10, 2011

பூங்கொத்தும் குழந்தையும்

பூங்கொத்தோடு வந்தவர்
நண்பனின் வார்டை
தேடிக்கொண்டிருக்கிறார்

நோய்மைக் குழந்தை
புன்னகைத்துப் பார்க்கிறது
முதலில் அவரை
பிறகு பூங்கொத்தை

நின்றுவிடுபவர்
அருகில் போய்
குழந்தையின் தலைதடவி
பூங்கொத்தைத் தருகிறார்

வாங்கி அணைத்து
சிரிக்கிறது குழந்தை

ஒரு பூவை
கிள்ளி எடுத்து
குழந்தையின்
கன்னத்தை தடவிவிட்டு
ஓடுகிறார்
நண்பனைத் தேடி

தூரமாகும் அவரைப்
பார்த்தபடியே
பூங்கொத்தில்
முகம் புதைக்கிறது
குழந்தை

4 comments:

  1. வாழ்த்துக்கள்..
    எளிமையான மற்றும் எதார்த்த கவிதை..

    ReplyDelete
  2. நன்றாயிருக்கு...

    ReplyDelete
  3. அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete