Thursday, November 18, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

242-

மண் பூசிய
பழத்தை எடுத்து
ஊதித் தின்றேன்

அருகில் வந்தவர்
அது நான்
எறிந்த கல்
வேண்டும் என்று
வாங்கிப்போனார்
கல் மனிதராக

ஊறும் சுவையின்
உள்ளிருந்தேன் நான்
பழத்தின் மரமாக

243-

சொல்லின்
விளிம்பில்
தொங்கும்
துளி

துளியில்
ஒளிரும்
பிரபஞ்சம்

பிரபஞ்சம்
குடிக்க
நீளும்
நாவு

விழுகிறது

துளி
சொல்

சொல்
துளி

இரண்டுமற்று
நான்

2 comments:

  1. //ஊறும் சுவையின்
    உள்ளிருந்தேன் நான்
    பழத்தின் மரமாக//

    மிக அருமை, பிடித்த வரிகள் இவை !!

    ReplyDelete
  2. SUPERB RAJA SIR:-))) I WISH I COULD WRITE IN TAMIL TOO

    ReplyDelete