Thursday, October 07, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

194-

மனிதனைத்
திறக்கும் சொல் ஒன்று
காலங்காலமாய்
பூட்டியே கிடக்கிறது
தன்னைத்
திறந்து கொள்ளத் தெரியாமல்

195-

கிடைக்காது என
நினைக்கும் போதெல்லாம்
கிடைத்து விடுகிறது
ஏதோ ஒன்று

196-

எழுதாத தாளில்
விரிகிறது
வானம்

197-

உங்கள் பின்னால்தான்
வந்து கொண்டிருக்கிறேன்
ஆனாலும்
உங்கள் முன்னால்
சென்று கொண்டிருக்கிறேன்

198-

நடந்து போனவர்களின்
சுவடுகளில்
படிக்க எதுவுமே இல்லை

199-

கவிதையின் அடிவாரத்தில்
படுத்துக்கிடந்தேன்
நிம்மதியைப் போர்த்தியபடி

1 comment:

  1. 194.

    அன்புதானோ அந்த சொல்?


    195.

    உண்மைதான்,


    196.

    நல்லா இருக்குங்க அந்த வானம்.

    197.

    அப்படியான முற்போக்கு சிந்தனைகள் தான் வாழ்வினை உயிர்த்திருக்கச் செய்கின்றன.

    198.

    நல்லா இருக்கு.

    199.

    இசையினைப்
    போல கவிதையும் நிம்மதி தரும் சொர்க்கம்தான்.

    ReplyDelete