Monday, August 16, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

151-

என் பாத்திரத்தில்
மழை
உங்கள் பாத்திரத்தில்
உணவு
அதனாலென்ன

152-

யாரும் என்னைத் தேடாதீர்கள்
ஜென் கவிதைகளில்
என்னைத் தேடுகிறேன்

153-

அவன் கனவில்
ஒரு கத்தியை
சொருகிவிட்டுப் படுத்தான்
காலையில் இறந்து கிடந்தான்

154-

மலைப் பாம்பை
விழுங்கிய எறும்பு
எறும்பாகவே நகர்கிறது

155-

வலி விழுங்கு
கண்ணீர் குடி
யுத்தம் கையெடு

1 comment:

  1. //மலைப் பாம்பை
    விழுங்கிய எறும்பு
    எறும்பாகவே நகர்கிறது//

    எறும்பினை போல சுயம் இழக்காமல் வாழ பழக வேண்டும்தான்.

    //வலி விழுங்கு
    கண்ணீர் குடி
    யுத்தம் கையெடு //

    ரொம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete