Sunday, July 11, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

126-

அன்பால் யாராவது
நகர்த்தி இருக்கலாம் என்றது
அருகில் வந்திருந்த மலை

127-

ஆகாரத்தை மறுத்த
கூண்டு பறவையின்
கண்களில் படிக்க முடிந்தது

சுதந்திரம் எனதுணவு
அதைத் தா

128-

யாரெனும்
கண்டெடுக்கக்கூடும்
என் பால்யத்தை
எனக்கேத் தெரியாமல்

129-

நம் அருகில்
இருக்கும் தூரங்களை
எப்படிக் கடப்பது

1 comment:

  1. //ஆகாரத்தை மறுத்த
    கூண்டு பறவையின்
    கண்களில் படிக்க முடிந்தது

    சுதந்திரம் எனதுணவு
    அதைத் தா//

    சுதந்திரம் மனிதர்களுக்கு மட்டுமில்லை, பறவைகளுக்கும் பிறப்புரிமைதான்.

    //யாரெனும்
    கண்டெடுக்கக்கூடும்
    என் பால்யத்தை
    எனக்கேத் தெரியாமல்//

    அந்த கணம் அற்புதமானது ராஜா sir.

    ReplyDelete