Monday, May 31, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

106-

மனம் கண்ட வலி
உருள்கிறது பந்தென
கால் உதைத்த பந்து
உடைகிறது பனியென

107-

பறவையோடு நண்பனானேன்
பறப்பதும்
நட்பாயிற்று

108-

இன்று நான்
எந்த எறும்பையும்
கொல்லவில்லை
இதோ என் கையில்
ஊர்ந்து செல்லும்
இந்த எறும்பு உட்பட

109-

என்ன வேண்டும் என்று
எனக்குத் தெரியவில்லை
என்பது கூட
எனக்குத் தெரியவில்லை

110-

என்னைத் தின்னத்தொடங்கிய கனவு
அதிகாலையில்
ஒப்படைத்துப் போனது முழுமையாய்

2 comments:

  1. 106.
    காலனையே காலால் உதைக்கிறவங்க நாங்க. வலியெல்லாம் எங்களுக்கு சாதாரணம்.

    107.
    பறக்கணும் போல இருக்கு.

    108.
    ஜீவ காருண்யம்.

    109.
    இப்படியாங்க அப்பாவியா இருக்கறது. இருந்தாலும் நல்லா இருக்கு.

    110.
    Superb. :)

    ReplyDelete