Powered by Blogger.

இப்போது

Thursday, May 06, 2010

வரைந்த சிலுவையின் மேல்
வந்தமர்ந்தது பறவை

உடல் குவித்தபோது
சில துளிகள்
சிறகுகளைப் போல
பறந்து விழுந்தன

எப்படி உன்னால்
அமர முடிந்தது

கேள்வியை அலகால்
கொத்திக் கொண்டு
பறந்து போனது

இப்போது சிலுவைமேல்
பறவை ஓவியமாய்

பறவையின் கீழ
சிலுவை உண்மையாய்

6 comments:

KALYANARAMAN RAGHAVAN said...

அருமையா இருக்கு இதைப் படிக்க.

ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)

பா.ராஜாராம் said...

மிக அருமை சந்திரா!

ராஜா சந்திரசேகர் said...

நன்றி ரேகா ராகவன்,பா.ராஜாராம்.

இரசிகை said...

nice........:)

butterfly Surya said...

அருமை.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி இரசிகை,பட்டர்பிளை சூர்யா.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்