Sunday, April 04, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

63-

உண்மையில்
பொய்கள் நான்தான்
தனியே எதுவுமில்லை

64-

கதவை மூடுகிறீர்கள்
சுதந்திரமாய் நான்
அடைத்துகொண்டு நீங்கள்

65-

நான் இருளை தின்பவன்
என்றவனைக் கேட்டேன்
எங்கே தின்று காட்டு

சிரித்தபடி சொன்னான்

உன்னைச் சுற்றி
இருக்கும் வெளிச்சம்
நான் இருளை தின்றதால்
முளைத்திருக்கிறது

சொல்லிவிட்டு
மென்று கொண்டிருந்தான்

எதை என்று
தெரியவில்லை

3 comments:

  1. அவன் என்ன மேன்றான்னு எனக்கு தெரிமே......

    சிரித்தபடி சொன்னான்

    ரொம்ப நல்லார்க்கு சார்....உங்க கவிதை...

    ReplyDelete
  2. //நான் இருளை தின்பவன்
    என்றவனைக் கேட்டேன்
    எங்கே தின்று காட்டு

    சிரித்தபடி சொன்னான்

    உன்னைச் சுற்றி
    இருக்கும் வெளிச்சம்
    நான் இருளை தின்றதால்
    முளைத்திருக்கிறது

    சொல்லிவிட்டு
    மென்று கொண்டிருந்தான்

    எதை என்று
    தெரியவில்லை //

    அட்டகாசம் :)

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  3. உண்மையில்
    பொய்கள் நான்தான்
    தனியே எதுவுமில்லை

    இது பொய்யல்ல நிஜம்

    ReplyDelete