Tuesday, February 23, 2010

பொய்கள்

என் கைபட்டு
விழுந்து கொண்டிருந்தது
பொம்மை

கை நீட்டிப்
பிடிப்பதற்குள்
உடைந்து போயிற்று

சிதறிக் கிடக்கிறது
பொம்மையின் உயிர்

குழந்தை வருவதற்குள்
எடுத்தாக வேண்டும்
பொம்மை கேட்டு
அழுது அடம் பிடித்தால்
நிறுத்த முடியாது

அப்புறப்படுத்துவதற்குள்
வந்து சேர்ந்த
குழந்தையின் கையில்
சிக்கியது
பொம்மையின் கால்

அழவில்லை
தேடலுடன்
பார்த்தது குழந்தை

மற்ற பகுதிகளை
மறைத்தபடி சொன்னேன்

ஒற்றைக்காலுடன்
ஓடிவிட்டது பொம்மை

திரும்பி வருமா
என்பது போல்
பார்த்தது குழந்தை

வரும் வந்து
விட்டுப் போன
காலைத் தேடும்
உடையாமல் வைத்திரு
எனச்சொல்ல
கைக்குள்
இறுக்கிக் கொண்டது

விரட்டி வரும்
ஒற்றைக்கால் பொம்மையிடமிருந்து
தப்பிக்க
ஓடிக்கொண்டிருந்தன
கால் முளைத்த
என் பொய்கள்

8 comments:

  1. கலக்கலா இருக்கு

    ReplyDelete
  2. 'கால் முளைத்த பொய்கள்' அருமையா இருக்கு.

    ReplyDelete
  3. ஞானக்கூத்தனின் ”அம்மாவின் பொய்களை” நினைவூட்டியது.எளிய ஆழமான கவிதை.

    ReplyDelete