Saturday, January 30, 2010

கவனமாகப் படியுங்கள்

கவனமாகப் படியுங்கள்
இந்த கவிதையின் வரிகளுக்கிடையில்
நீங்கள் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறீர்கள்

கவனமாகப் படியுங்கள்
இந்த கவிதையில் எங்கோ ஒரு மூலையில்
நீங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறீர்கள்

இந்த கவிதையின் புள்ளிகள் கல்லெறிந்து
நீங்கள் காயப்பட்டிருக்கிறீர்கள்

இந்த கவிதையின் வார்த்தைகளுக்கிடையில்
நீங்கள் நசுங்கிக் கொண்டிருக்கிறீர்கள்

கவனமாகப் படியுங்கள்
இந்தக் கவிதையின் முடிவில்
நீங்கள் நாடுகடத்தப்பட்டிருக்கிறீர்கள்

இந்தக் கவிதையின் அடியில்
நீங்கள் நீச்சலை மறந்துப் போயிருக்கிறீர்கள்

இந்த கவிதையின் மயக்கத்தில்
நீங்கள் மூச்சைத் தொலைத்திருக்கிறீர்கள்

கவனமாகப் படியுங்கள்
இந்த கவிதையின் வண்ணங்களில்
உங்கள் நிறத்தை மறந்துபோயிருக்கிறீர்கள்

இந்த கவிதையின் சூதாட்டத்தில்
உங்களை இழந்திருக்கிறீர்கள்

கவனமாகப் படியுங்கள்
இந்த கவிதையின் வியூகத்தில்
நீங்கள் இதை எழுதியவனை விடுவித்துவிட்டீர்கள்

4 comments:

  1. இந்த கவிதையை மட்டுமல்ல, ராஜாவின் எந்த கவிதையையும் கவனமாகத்தான் படிக்க வேண்டும். படிப்பவர்களை கவிதையின் வரிகளுக்குள் சிறை வைப்பது ராஜாவிற்கு கைவந்த கலை இல்லை இல்லை கவிதை.

    ReplyDelete
  2. நன்றி கல்யாணி வருகைக்கும் வரிகளுக்கும்

    ReplyDelete
  3. //கவிதையின் வியூகத்தில்
    நீங்கள் இதை எழுதியவனை விடுவித்துவிட்டீர்கள்//

    vidu pattutiingkala Raaja...???

    ReplyDelete