Friday, January 22, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

34-

கிடைத்துவிட்டன கேள்விகள்
கிடைக்காமலா போகும்
பதில்கள்

35-

நீளமாக நீங்கள்
வரையும் கோடும்
சிறிதாக நான்
வரையும் கோடும்
கோடுகள்தான்
கோடுகளன்றி வேறில்லை

36-

நீ தூக்கி
எறிந்து
நீயே பிடி
உன்னை

பிறர் பிடித்தால்
பின் தூக்கி
எறியப்படுவாய்
திரும்ப உனக்குள்
வந்து சேராதபடி

37-


இரண்டாவது
உதிர்ந்த இலை
துணையாயிற்று
முதலில்
விழுந்த இலைக்கு

38-

உறக்கத்திலிருந்து
வெளியேறி விட்டேன்
ஆறுதல்படுத்த வேண்டும்
இமைகளை

4 comments:

  1. சித்தனின் குறிப்புகள் நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  2. //கிடைத்துவிட்டன கேள்விகள்
    கிடைக்காமலா போகும்
    பதில்கள்//

    ஒரு கை பார்க்காம விடுறதில்லை னு முடிவு பண்ணிட்டீங்க போல இருக்கே?

    //நீளமாக நீங்கள்
    வரையும் கோடும்
    சிறிதாக நான்
    வரையும் கோடும்
    கோடுகள்தான்
    கோடுகளன்றி வேறில்லை//

    அவரவர் கூடு அவரவர்க்கு அரண்மனையே!

    நீ தூக்கி
    எறிந்து
    நீயே பிடி
    உன்னை

    //பிறர் பிடித்தால்
    பின் தூக்கி
    எறியப்படுவாய்
    திரும்ப உனக்குள்
    வந்து சேராதபடி//

    உண்மைதான்.

    //இரண்டாவது
    உதிர்ந்த இலை
    துணையாயிற்று
    முதலில்
    விழுந்த இலைக்கு//

    வீழ்ச்சியில் கூட நட்பின் தரிசனம்.

    //உறக்கத்திலிருந்து
    வெளியேறி விட்டேன்
    ஆறுதல்படுத்த வேண்டும்
    இமைகளை //

    வாழ்க்கையின் ஓட்டத்தில் உறக்கம் கூட இரண்டாம் பட்சமாகிப் போனது.

    ReplyDelete
  3. நன்றி அசோக்,கல்யாணி.
    கல்யாணி உங்கள் தொடர்ந்த வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete