Powered by Blogger.

அரங்கில் அவன்

Friday, October 02, 2009

அரங்கில் நடித்து முடித்து
பார்வையாளர் இருக்கையில் அமர்ந்து
மீண்டும் பார்த்து
சரி செய்கிறான்
மறுபடி பழுதின்றி தயாராக

வெறும் மேடையை
ஏன் வேடிக்கைப் பார்க்கிறாய்
என்று அவனைப் போகச் சொல்கிறான்
கதவை மூடும் காவலாளி

3 comments:

தமிழ்ப்பறவை said...

ரசித்தேன் தனிமை நாடகத்தை...

கல்யாணி சுரேஷ் said...

இப்படியான ஒரு வெறும் மேடை வேடிக்கை வாழ்க்கைக்கும் அவசியம்தானோ?

ஆரூரன் விசுவநாதன் said...

வலிமையான வரிகள்

வாழ்த்துக்கள்

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்