Friday, September 04, 2009

மூவர் மற்றும் கடல்

அப்பா மீன்கள் விற்கிறார்

மகன் மீன்களைத் தூக்கி
கடலில் எறிகிறான்

அப்பா மீன்கள் விற்ற பணத்தை
எண்ணியபடி நடக்கிறார்

மகன் எறிந்த மீன்களின் கணக்கை
போட்டபடி நடக்கிறான்

சிரிக்கிறது கடல்
தந்தை மகன் மற்றும்
என்னைப் பார்த்து

7 comments:

  1. ஏதாவது zen கவிதைவின் மொழிமாற்றமா?

    ReplyDelete
  2. இது மொழிமாற்றமில்லை; மொழி ஆற்றம்!!

    ReplyDelete
  3. தருமி
    உங்கள் வரிகளை மிகவும் ரசித்தேன்.நன்றி.

    ReplyDelete
  4. அடிச்சு கலக்கிறீங்க சந்திர சேகர்!கொஞ்சம் வேலை பளு. நேரம் வாய்த்ததும்,குறும்படம் பார்த்து எழுதட்டுமா சந்திரசேகர்? நன்றி!

    ReplyDelete