Powered by Blogger.

மூவர் மற்றும் கடல்

Friday, September 04, 2009

அப்பா மீன்கள் விற்கிறார்

மகன் மீன்களைத் தூக்கி
கடலில் எறிகிறான்

அப்பா மீன்கள் விற்ற பணத்தை
எண்ணியபடி நடக்கிறார்

மகன் எறிந்த மீன்களின் கணக்கை
போட்டபடி நடக்கிறான்

சிரிக்கிறது கடல்
தந்தை மகன் மற்றும்
என்னைப் பார்த்து

7 comments:

D.R.Ashok said...

ஏதாவது zen கவிதைவின் மொழிமாற்றமா?

ராஜா சந்திரசேகர் said...

இல்லை

தருமி said...

இது மொழிமாற்றமில்லை; மொழி ஆற்றம்!!

ராஜா சந்திரசேகர் said...

தருமி
உங்கள் வரிகளை மிகவும் ரசித்தேன்.நன்றி.

பா.ராஜாராம் said...

அடிச்சு கலக்கிறீங்க சந்திர சேகர்!கொஞ்சம் வேலை பளு. நேரம் வாய்த்ததும்,குறும்படம் பார்த்து எழுதட்டுமா சந்திரசேகர்? நன்றி!

சேரல் said...

Amazing.........

-ப்ரியமுடன்
சேரல்

ராஜா சந்திரசேகர் said...

நன்றி பா.ரா,சேரல்

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்