Powered by Blogger.

மழை வாசம்

Sunday, July 26, 2009

செல்லமாய் கோபித்து
குழந்தை மேல்
படிந்துள்ள மழையை
துடைத்தெடுத்து
வேறு உடை எடுக்கப்
போகிறாள் அம்மா
ஈர துணி முகர்ந்து
மழை வாசம்
பிடிக்கிறது குழந்தை

5 comments:

சேரல் said...

அழகு! அம்மா, குழந்தை, மழை, இவர்களை வைத்தே, பல அற்புதமான கவிதைகளை நீங்கள் வடித்திருக்கிறீர்கள். மூன்றுமே மிக அழகான விஷயங்கள். நினைக்கவும், பார்க்கவும், துய்க்கவும், எழுதவும், படிக்கவும், எப்போதும் விருப்பமான விஷயங்கள். தொடரட்டும்.

-ப்ரியமுடன்
சேரல்

நேசமித்ரன் said...

நீங்கள் தொடும் விஷயங்கள் அதை நீங்கள் சொல்லும் வழி முறை
கவிதைக்குள் கவிதை பொதிந்திருக்கும் சூத்திரம்
அழகு ..!

raajaachandrasekar said...

சேரல்/நேசமித்ரன்
மனதுக்கு அருகாமையில் வரும் விஷயங்கள்
கவிதைக்கு நெருக்கமாகி விடுகின்றன.
உங்களுக்கு நன்றி.

Kalyani Suresh said...

கவிதையில் உணர்ந்தேன் மழை வாசம் மட்டுமல்லாது அம்மாவின் வாசனையும். நன்றி ராஜா.
நட்புடன்
கல்யாணி சுரேஷ்.

இரசிகை said...

!

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்