Tuesday, November 06, 2007

கூட்டம் நிறைந்த பேருந்து

திரும்புகிறது பேருந்து
நின்றபடியே பெரியவர்
எழுந்து இடம்தர
யாருக்கும் இடமில்லை
மனதில்
லேசாக சாய்கிறார்
கண் மூடித் திறக்கிறார்
நெறிசலில் நெளிகிறது
நின்று நகர்கிறது
இன்னும் வீங்கிப் பேருந்து
இருமலைத் துண்டால் மூடுகிறார்
கசியும் சத்தம்
உள் முழுதும்
வருகிறது என் நிறுத்தம்
இருக்கை பெரியவருக்குதான்
புன்னகைத்து
உட்காரச்சொல்லி
இறங்குகிறேன்
போகிறது பேருந்து
பெரியவர் இல்லை
கூடவே இறங்கியவர்
சொல்லிப் போகிறார்
காலியான வாகனம்
செளகர்யமாக இருக்கும்
கூட்டம் நிறைந்த பேருந்தில்தான்
வாழ்க்கை இருக்கிறது

2 comments:

  1. காலியான வாகனம்
    //செளகர்யமாக இருக்கலாம்
    கூட்டம் நிறைந்த பேருந்தில்தான்
    வாழ்க்கை இருக்கிறது//

    இப்போதெல்லாம் கத, கவிஜ என்றாலேஓடி விடுவதுண்டு. ஏனென்று தெரியவில்லைதான்.

    இருப்பினும் உங்கள் கவிதைகளை வாசித்தேன். நுட்பங்கள் கவிதைகளை நன்கு உயர்த்துகின்றன.

    நன்று; வாழ்த்துக்கள்.

    மேலேயுள்ள உங்கள் வரிகளில் ஒரு மாற்றம் செய்து பார்த்தேன்! தவறெனில் மன்னிக்க.

    ReplyDelete