Wednesday, October 11, 2006

சாம்பலுக்கு அடியில் பெயர்கள்

பற்றி எரிகிறது பூந்தோட்டம்

இருக்கும் தேனை ஊற்றி
தீயை
அணைக்கப் பார்க்கின்றன பூக்கள்

நெருப்புக்குத் தெரியவில்லை
தேனும் இனிப்பும்

ஒவ்வொரு இதழாகப்
பொசுங்கியது

விடை பெற முடியாத
தேனீ ஒன்று
மரணத்தைச் சுவைத்தபடி
முடிந்துபோனது பூக்களோடு

சாம்பல் நிறமாய் நிலம்

பெயர் வைத்துக் கூப்பிட்ட
எந்தப்பூக்களும் இல்லை

சாம்பலுக்கு அடியில்
நெளிகின்றன பெயர்கள்
வலிகளுடன்

இறந்து போகலாம் அவைகளும்

தீயைச் சபிக்கிறது மனம்
சாம்பல் நிறமாய் நிலம்

பின் எப்போதாவது
தோன்றலாம் பூந்தோட்டம்

அதை உயிரோடு
வைத்திருக்க வேண்டும்
அப்போதய கனவு

2 comments:

  1. இருக்கும் தேனை ஊற்றி
    தீயை
    அணைக்கப் பார்க்கின்றன பூக்கள்

    remba pidichchathu......

    ReplyDelete
  2. வரிகளில் இழையோடுகிறது தீர்ந்து போகாத ஒரு சோகம்.

    ReplyDelete